தினமும் காலையில் மிதமான நீரை விட வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்யம் கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெந்நீரை தினமும் பருகும் போது உடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ளவும் உதவுகிறது. வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் தீரும்.
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். தினமும் வெந்நீர் குடிப்பதால் பலவித மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான். மேலும் மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புகள் அகன்றுவிடும் என கூறப்படுகிறது.
– தகவல் தொகுப்பு – M. முத்துலெட்சுமி
Leave a Reply
You must be logged in to post a comment.