நீரிழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மங்கனீசு சத்து, மாவுச்சத்து கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
பித்தப்பை கல்லைக் கரைக்கும்:
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதயம் காக்கும்:
நிலக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், நிலக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோயையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பாராமரிக்கும்:
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிப்பினால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுத்து இளமையை பராமரிக்கிறது.
ஞாபகசக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. இதில் மூளையின் வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயன்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடலையில் பரிப்டோபன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டி, மன அழுத்தத்தை போக்குகிறது.
தகவல் தொகுப்பு – எம்.முத்துலெட்சுமி
Leave a Reply
You must be logged in to post a comment.