shadow

நாம் சிறிது சிறிதாக நம்முடைய மொழி, இனம், மண் இவற்றை இழந்து வருகிறோம். இதற்கெல்லாம் காரணம் 1956ல் மொழிவாாி மாநிலமாக இந்தியா பிாிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து தமிழ்நாடு என மொழிவாாி மாநிலம் உதயமானது. தமிழ் மொழியில் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளை கலப்பு செய்து தமிழ் மொழியை அழிக்க முயற்சித்து வருகிறார்கள். தமிழ் மொழி அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு தமிழ் ஆசிாியர்களும், தமிழ் அறிஞர்களும், கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஒருவர் எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். அதில் தவறில்லை. முன்னால் பிரதமர் நரசிம்மராவ் 13 மொழிகள் தொிந்தவர். மொழிகளை கற்றுக் கொள்வது என்பது, அந்ந அந்ந மொழிகளில் உள்ள இலக்கியங்கள் மற்றும் அறிவியல் சம்மந்தப்பட்ட விவரங்களை தொிந்து கொள்வதற்காக தான். ஆனால் நம் தாய் மொழியை மறந்து மற்ற மொழிகளுக்கு அடிமையாகிவிடக்கூடாது. நாம் எவ்வளவு தான் மற்றவர்களிடம் பழகினாலும், நம் தாய் தந்தையை மறந்துவிடுவோமா?. அதுபோலத்தான். பொதுவாக ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் போது முழுமையாகக்கற்றுக் கொள்ள வேண்டும். பிறமொழி கலப்பு இருக்கக்கூடாது. தமிழ் பேசும் பொழுது தமிழை மட்டுமே பேசவேண்டும். ஆங்கிலம் பேசும்போது ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். ஆனால் இப்பொழுது பள்ளிகளில் ஆங்கில வழியில் கற்று தருகிறேன் என்று சொல்லிக்கெண்டு ஆங்கில மொழியை கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். கைபேசியில் செய்திகளை அனுப்பும் பொழுது ஆங்கில எழுத்துக்களை உபயோகித்து தமிழை எழுதுகிறார்கள் இது என்னவாகும் என்றால், இறுதியில் தமிழும் தொியாமல் ஆங்கிலமும் தொியாமல் அறிவிலியாக போய்விடுவார்கள் ஆங்கிலத்தில் ஒரு செய்தியைக் கூறினால் ஆங்கிலத்திலேயே கூற வேண்டும். தமிழில் கூறினால் தமிழிலேயே கூறவேண்டும். மொழிக் கலப்பு இருக்கக்கூடாது.

தமிழுக்கு அமுதென்று பேர்
அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

இதை நம் தமிழுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.

Advertisement

shadow

Leave a Reply