shadow

வாழ்வா?

 சாவா? இல்லை என்றால் ஏன் இந்த அவசரம்? யாரை திருப்திப்படுத்த இந்த அவசரம்? நாடு முழுதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக் கடத்தல், பாதுகாப்பிண்மை என்ற நிலையில் வாழும் மக்களுக்கு எந்த அவசரச் சட்டமும் போடவில்லையே? அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யலாம் என நடக்க வேண்டாம்.

உங்களுக்கு முன்னால் பிரதமர் இந்திரா அம்மையார் எமர்ஜெண்சி கொண்டு வந்தாரே, அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? பிரதமரே இந்திய மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யாமல் சொந்த நாட்டில் அகதிகளைப்போல் வாழ வழி செய்ய வேண்டாம். இந்தியாவை இருண்ட தேசமாக ஆக்கிவிட வேண்டாம். பா.ஜ.க-வின் மிகப்பெரிய பின்னாடைவு இந்த சட்டம் கொண்டுவர துடிப்பதுதான். இது மிகவும் தவறான அணுகுமுறை இதன் தாக்கம் 2016 தேர்தலில் தெரிய வரும்.

இதோடு நின்று விட்டீரோ? சாலை பாதுகாப்பு என்ற புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து துறையில் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இந்த மசோதாவை ஆமல்படுத்தினால் மாநில அரசின் வருவாய் முற்றிலும் பறிக்கப்படும். மேலும் நிதி பற்றாக்குறையால் போக்குவரத்துதுறை சிக்கும் சூழ்நிலை உருவாகும்.

இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தபோது அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது ஆனால் மாநிலங்கள் அவையில் ப.ஜ.க -விற்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் அ.தி.மு.க. -வின் ஆதரவை பெற முயற்சி செய்யும். தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் நிலம் கையாகப்படுத்தும் மசோதாவை ஆதரித்தது போல மாநிலங்கள் அவையில் சாலை பாதுகாப்பு மசோதாவை அ.தி.மு.க. ஆதரிக்கும் என்ற அச்சம் உள்ளது. டீசல் விலை 1ரூபாய் அதிகரித்தால் போக்குவரத்து கழகத்திற்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

இதனால் மத்திய அரசு இந்த இரண்டு மசோதாவையும் நிறைவேற்றுவதை கைவிட்டு சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்…

நன்றி வணக்கம்…!

MANDRASELVAN RAGUPATHI
Founder / Senior Editor
Mobile/WhatsApp:+919750054908

Advertisement

shadow

Leave a Reply