shadow

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருப்புல்லாணி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில் நியாயவிலைக்கடை கட்டுதல் பணிகளுக்காக ரூபாய் 5.00 ஐந்து லட்சம் நிதி ஒதுக்கீடு ! !

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புல்லாணி ஒன்றியம், தாதனேந்தல் ஊராட்சியில், பள்ளபச்சேரி கிராமத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டுதல் பணிகளுக்காக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2012 – 2013 ஆண்டின் கீழ் மேற்படி கட்டிட பணிகளுக்காக ரூபாய் 5.00 ( ஐந்து லட்சம் ) நிதி பரிந்துரை செய்து, ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டிட பணிகளுக்கான அரசாணை பெற்று வழங்கப்பட்டது.

தற்போது பணிகள் நிறைவுற்று பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

News Post : PRO @ MLA OFFICE Ramanathapuram.

Advertisement

shadow

Leave a Reply