shadow

நமது நாட்டில் அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி போன்ற பல வகையான மருந்துகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் ஆகப் பெரும்பான்மையாக ஆங்கில வழி மருந்துகள்தான் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் பலன்களும், பக்க விளைவுகளும் ஆராயப்பட்டு அவை பதிவு செய்யப்பட்ட காரணத்தினாலும், பெரும் நிறுவனங்கள் இவற்றை பெருமளவில் வியாபாரம் செய்வதுமே இந்த நிலைக்குக் காரணம். நமது நாடு அனைத்து துறைகளிலும் சுயசார்பு அடையவேண்டும், மருந்துகள் பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், மருந்துக் கொள்கை உருவாக்கப்பட்டது. அரசின் பங்களிப்பு கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக ழஹடு, ஐனுஞடு போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

அரசு மருத்துவமனைகளுக்கு இந்த பொதுத் துறை தயாரிக்கும் மருந்துகளை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது. விற்பனையில் ஈடுபட்ட நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்று கொண்டிருந்த நிலையில், பொதுத் துறை கம்பெனிகள் மிகக் குறைந்த விலைக்கு கொடுத்தன. இதே போல் தடுப்பூசி மருந்துகளும் இங்கேயே தயார் செய்யப்பட்டன. 1990 களில் வந்த சீர்திருத்த கொள்கைகளால், மருந்துத்துறை தலைகீழ் மாற்றம் கண்டது. மற்ற துறைகள் போலவே உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், இறக்குமதிக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதின் விளைவாக அனைத்து சட்டங்களும் மாற்றம் கண்டன. சட்டக்கதவுகள் தாராளமாக திறந்து விடப்பட்டன. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதுவாக திருத்தங்கள் செய்யப்பட்டன.

மருந்துத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களும் கார்ப்பரேட்டுகளும் பயனடைந்தனர். விலைகளின் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. போட்டிகள் சமமற்ற நிலைக்கு வந்தன. லைசென்சிங் முறைகளில் விதிகள் மாற்றம் கண்டன. மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அரசின் துணையோடு விற்கப்பட்டன. தேவையற்ற மருந்துகளின் எண்ணிக்கை அதிகமானது. பொதுவாக மக்கள் நலனில் அக்கறையற்ற போக்கும், நல்வாழ்விற்காக செலவிடுதலை குறைப்பதும் புள்ளி விவரங்களிலிருந்து பார்க்க முடிகிறது.பொதுத்துறைபொதுத்துறை நிறுவனங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்காததன் விளைவாக,உற்பத்தி குறைந்தது.

அரசு மருத்துவமனைகளுக்கு கூட வழங்குவது நிறுத்தப்பட்டது. இன்று அங்கு தனியார்தான் மருந்துகளை சப்ளை செய்கிறார்கள். அரசு தன்னை பின்னுக்கு தள்ளிக் கொண்டும், தனியாரை முன்னிறுத்துவதற்கான வேலைகளை அழகுற செய்தும் வருகின்றது. 7 ஆண்டுகளுக்கு முன்னர் 3 பொதுத்துறை தடுப்பூசி மருந்து நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டபோது அதை எதிர்த்து ஒரு வலுவான பிரச்சாரத்தையும், இயக்கங்களையும் அகில இந்திய மருத்துவப் பிரதிநிதிகள் சம்மேளனமும், இடதுசாரி தொழிற்சங்கங்களும், பொது நல அமைப்புகளும் நடத்தி அன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் முயற்சிகளை தோல்வியுறச்செய்தன. இன்று பதவியேற்றிருக்கும் பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக சாவு மணி அடிக்க முயலும் நிலையில்,

அதெற்கெதிரான இயக்கங்கள் வலுப்பெற வேண்டிய அவசியம் உள்ளது.சென்னையில் உள்ள ஐனுஞடு , க்ஷஊழு நிறுவனங்களையும், குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனத்தையும் காக்க திட்டம் தீட்டப்பட்டு தமிழகத்தில் வலுவான இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும்.காப்புரிமை பிரச்சனைஉலக அளவில் மருந்துத் துறையில் காப்புரிமைச் சட்ட விதிகள் இருந்து வந்த போதிலும், 1970ல் இந்திய காப்புரிமைச் சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ், நமக்கு பல பயன்கள் கிடைத்தன. குறிப்பாக எந்தவொரு புதிய மருந்துக்கும் ஏகபோக உரிமம் கிடையாது. தயாரிப்பு முறைக்கு 7 ஆண்டுகள் மட்டுமே காப்புரிமை வழங்கப்பட்டது. இந்திய நிறுவனங்கள் வேறு முறையில் அதே மருந்தினை தயாரிக்க முடிந்த காரணத்தினால், அனைத்து மருந்துகளும் குறைந்த விலையிலும், தாராளமாகவும் கிடைத்தன.

உரிமம் பெற்ற ஒரு நிறுவனம் அம்மருந்தினை குறிப்பிட்ட காலத்திற்குள் தயாரிப்பு செய்யாமல் போனாலோ, அல்லது பெருவாரியான மக்களுக்கு அம்மருந்து தேவைப்பட்டாலோ, கட்டாய உரிமம் என்ற பிரிவின் கீழ் அரசு அந்த மருந்தை தானோ அல்லது வேறு நிறுவனத்தின் மூலமோ தயாரித்துக் கொள்ளலாம். இதன் காரணமாக இந்தத் துறையில் ஏராளமான இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்து ஒரு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கின. இந்திய மருந்துத் துறை பெரும் வளர்ச்சி கண்டது. இந்திய நிறுவனங்கள் பல தொழிற்சாலைகளை உருவாக்கின. பன்னாட்டு நிறுவனங்களும் அதையே செய்தன. மூலப்பொருள், அடிப்படை (க்ஷஹளுஐஊ னுசுருழுளு) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

ஏற்றுமதி அதிகரித்தது. துறை வளர்ச்சி கண்டது. சுமார் 25 ஆண்டு காலம் இது நீடித்தது.காப்புரிமைச் சட்டம் திருத்தம் செய்யபடவேண்டுமென பல முயற்சி செய்யப்பட்டபோதெல்லாம் அகில இந்திய மருத்துவப் பிரதிநிதிகள் சம்மேளனம் இந்தியாவின் சுயசார்புக்கு எதிரான அனைத்து சட்ட வரைவுகளையும் எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2005ல் சட்ட மாற்றம் (காப்புரிமை) நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது இடதுசாரி கட்சிகள் தவிர்த்து அனைவரும் ஆதரித்தார்கள் என்பது முக்கியமான நிகழ்வு. இடதுசாரிகள் அளித்த நிர்பந்தத்தினால் பிரத்யேக விற்பனை உரிமம் (நுஒஉடரளiஎந ஆயசமநவiபே சுiபாவள), ஒரு மருந்தை 20 வருடத்திற்கு மேல் மறு காப்புரிமை (நுஎநசபசநநniபே) செய்வது போன்றவை நிராகரிக்கப்பட்டன. நாட்டின் தேவைக்கேற்ப கட்டாய உரிமம் (ஊடிஅயீரடளடிசல டுiஉநளேiபே) போன்ற முக்கிய அம்சங்கள் தொடரவும் செய்தன.

2005 முதல் 2013 வரையில் வழங்கப்பட்ட 4489 புதிய உரிமங்களில் ஏறத்தாழ 3800க்கு மேல் பன்னாட்டு நிறுவனங்களால் பெறப்பட்டுள்ளன. 1995க்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பல மருந்துகளுக்கு 2015ல் மறு காப்புரிமைகள் வழங்கப்படும் என்பதும் யதார்த்த நிலை.இந்நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது, புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. நமது நாட்டின் அறிவுசார் சொத்துரிமை (ஐவேநடடநஉவரயட ஞசடியீநசவல சுiபாவள) குறித்து தீர்மானிக்க இரு நாட்டு நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நமது நாட்டில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அலுவலகங்களுக்கு புது தில்லியில் அலுவலகம் தொடங்கவும், நமது தொழிற்சாலைகளை பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது இறையாண்மை ஒட்டு மொத்தமாக அடமானம் வைக்கப்பட்டுள்ளது.

விலை கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதற்காக மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 1976ல் உருவாக்கப்பட்டது. 1978ம் ஆண்டில் முதல் மருந்துக் கொள்கை உருவாகியது. உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள், தேவையற்ற மருந்துகள் என்று பல வகைகளாக பிரிக்கப்பட்டு, அதற்குரிய லாபம் நிர்ணயிக்கப்பட்டன. தயாரிப்பு விலையிலிருந்து குறைந்த பட்சமாக 40 சதவீதத்திலிருந்து அதிக பட்சமாக 100 சதவீதம் வரை கூட்டி உச்சபட்ச விலை (ஆயஒiஅரஅ சுநவயடை ஞசiஉந) நிர்ணயிக்கப்பட்டது. சில உயிர் காக்கும் மருந்துகள், அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை அரசே தீர்மானித்தது. இதனால் தனியார் மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் லாப வேட்டை தடுக்கப்பட்டது.

ஆனால், அரசு பின்னர் இந்த கட்டுப்பாட்டை படிப்படியாக தளர்த்தி வந்தது. 1976ல் கட்டுப்பாட்டில் இருந்த 347 மொத்த மருந்துகளின் எண்ணிக்கை 1987ல் 166 ஆகவும், பின்னர் 142 ஆகவும் குறைந்தது. 1995ல் 76 மருந்துகள் மட்டுமே கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. இதே போன்ற நிலைமை மற்ற அனைத்து மருந்துகளுக்கும் ஏற்பட்டது. 2011ல் அரசு நடத்திய ஒரு ஆய்வில் சில மருந்துகளின் உச்ச பட்ச விலை தயாரிப்பு செலவிலிருந்து 203 சதவீதத்திலிருந்து 1123 சதவீதம் வரை லாபம் பெறும் வகையில் இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. பல முன்னணி இந்திய நிறுவனங்களை இன்று பன்னாட்டுக் கம்பெனிகள் விழுங்கி விட்டன. மீண்டும் இந்தியச் சட்டங்களை மாற்றவும், காப்புரிமை கோரி வாதங்கள் தொடர்கின்றது. அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தி வெகுவாக குறைந்து விட்டது. சுயசார்பு கொள்கைகளை அடகு வைக்கும் அரசின் முடிவுகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்திடல் மிக அவசியம்.

- ர என்.சிவகுரு, ஆர்.ரமேஷ் சுந்தர் ர (நன்றி: தீக்கதிர்)

Advertisement

shadow

Leave a Reply