shadow

பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள், “பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை விட மாற்று வழிகளை கடைப்பிடிக்கலாம் என்று ரிஸர்வ் வங்கி ஆளுநர் ரகுராமா ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியபோது பாங்குச் சந்தை மற்றும் வேறு நிலையான லாபம் தரக்கூடிய முதலீடுகள் போன்றவற்றில் சிறப்பான லாபம் கிடைத்துவருகிறது. தங்கத்தின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது சரியான முடிவு என்றாலும் மக்கள் அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்வதை விட மாற்று வழிகளை கடைப்பிடிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடத்தில்தான் நாம் சிறிது சிந்திக்க வேண்டும். நாம் நாட்டில் 100க்கு 75 சதவீதம் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அவர்களுக்கு பங்குச் சந்தை என்றால் என்ன? என்றே, தெரிய வாய்ப்பில்லை. எந்த எந்த நிறுவனங்கள் லாபத்தில் ஓடுகின்றன, எவை நஸ்டத்தில் ஓடுகின்றன என்று நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பொதுவாக வங்கிகளில் தனது பணத்தை சேமிப்பார்கள் அல்லது தங்கத்தை சிறிது சிறிதாக வாங்கி பெண்குழந்தைகளுக்கு சேர்த்துவைப்பார்கள். பெரும்பாலும் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் எனக்குத்தெரிய முதலீடுகள் என்று செல்லக்கூடிய Investment என்ற கொள்கைக்கே செல்வதாக தெரியவில்லை. இதை விட்டால், ஒரு இடம் வாங்கி வீட்டைக் கட்டுவார்கள். வீட்டைக்கட்டி முடிப்பதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்று அடுத்த கட்டுரையில் கூறுகிறேன். இன்று தங்கத்தை இறக்குமதி செய்கிறார்கள் தங்கம் விலை குறைகிறது. அதில் முதலீடு செய்வது தவறு என்று நினைத்தால், திடீரென அரசாங்கம் இறக்குமதியை நிறுத்திவிட்டால், என்ன செய்வது எப்பொழுது இறக்குமதியை நிறுத்தும், எப்பொழுது உயர்த்தும் என்று யாருக்கும் தெரியாது. அரசாங்கம், தன்னைப்பற்றி கவலைப்படுகிறதே ஒழிய நடுத்தர, கீழ்த்தட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை. நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்கள் வீட்டில் இரண்டு அல்லது மூன்று பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் தங்கள் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்கும் போது மணமகன் வீட்டார் என்ன கேட்கிறார்கள் பாங்குச் சந்தையில் எவ்வளவு பணம் போட்டு இருக்கிறாய் என்றா கேட்கிறார்கள்? இல்லையே எவ்வளவு தங்கம் தருவீர்கள்? எவ்வளவு பணம் தருவீர்கள்? என்று தான் கேட்கிறார்கள். அப்படியானால் நடுத்தர, கீழ்த்தட்டு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். சரி அடுத்த விசயத்திற்கு செல்வோம். ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்லும் யோசனை யாருக்காக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பெரிய பண முதலாளிகளுக்கு அவர் யோசனை சொல்கிறார். பாங்குச் சந்தை என்பது என்ன? அதில் எவ்வளவு ஏற்ற இரக்கம் இருக்கிறது என்று சாதாரண மக்களுக்குத் தெரியுமா? இவர்கள் ஒன்றும் தெரியாமல் .முதலீடு செய்தால் என்ன ஆகும்? இழப்பு ஏற்பட்டால் அரசாங்கம் கொடுக்குமா? அதற்கு ஒன்று செய்யலாம், அரசாங்கம் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தலாம். அப்படியானால் நடுத்தர, ஏழை மக்களுக்கு லாபம் ஏற்படும், வாங்கி சேமிப்பு பாதுகாப்பானதும் கூட. ஆனால் அரசாங்கம் என்ன செய்கிறது வங்கி வட்டியை மிகவும் குறைத்து கொண்டே போய் நடுத்தர, ஏழை மக்களுக்கு அதிக வட்டியும் கொடுப்பதில்லை. இவர்கள் சேமிக்கும் பணத்தை எடுத்து குறைந்த வட்டிக்கு பணம் முதலைகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து விட்டு, அதை வசூலிக்க முடியாமல் அரசாங்கத்தை திவால் ஆக்கிக் கொண்டிருக்கிறது.
சிந்தியுங்கள் மக்களே! அடுத்த கட்டுரையில் சந்திக்கிறேன்.

Advertisement

shadow

Leave a Reply