shadow

நீங்கள் யாரை வேண்டுமானாலும் MLA ஆகவே MP ஆகவோ தேர்ந்தெடுங்கள் அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. அது உங்கள் விருப்பம். அவர்கள் சட்டமன்றம் சென்றோ, நாடாளுமன்றம் சென்றோ எத்தனை மணி நேரம் உங்கள் தொகுதிக்கு பேசுகிறார்கள் என்று கவனியுங்கள். நீங்கள் அனைவரும் செய்தித்தாள் படிப்பவர்களாகத்தான் இருப்பீர்கள். உங்களது MLA MP சட்டசபையில் நாடாளுமன்றத்தில் உங்கள் தொகுதிக்காக அரசாங்கத்திடம் என்ன பாிந்துரை வைக்கிறார்கள் என்று கவனியுங்கள். பொதுவாக ஒரு MLA MP ஆகும் கட்சியாக இருந்தால் அவர்கள் சட்டசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ எதையுமே பேசுவதில்லை. அந்த வருட அல்லது ஜந்து ஆண்டு காலமே எதையும் பேசாமல் அரசாங்கம் தொகுதிக்கு கொடுக்கும் பணத்தை மக்களுக்காக எந்த செலவையும் செய்யாமலும் தொகுதி மக்களைப்பற்றி சிறிதும் கவலையே படாமலும் MLA MP க்கள் இருந்து விடுகிறார்கள். எதற்கு இடங்களை சட்டசபைக்கோ நாடாளுமன்றத்திற்கோ வாக்குகளை செலுத்தி நாம் அனுப்பிவைக்கிறோம். இப்படி ஒன்றும் பேசாமல் மக்களைப்பற்றி கவலைப்படாமல் ஜந்து வருடத்தை வீணடிப்பதற்கா நாமும் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. பிறகு எதற்கு தேர்தல் நடைபெறுகிறது? வரைசியில் நின்று நாம் ஓட்டளிக்ளிறோம்.? எனக்கு புாியவில்லை. தேர்தலில் நிற்பவர்கள் நம்மிடம் வாக்கு பெறும்வரை நம்மை சந்திக்கிறார்கள். அந்த குறையை நிவர்த்தி செய்கிறேன், இந்த குறையை நிவர்த்தி செய்கிறேன் என்று நமக்கு வாக்கு கொடுக்கிறார்கள். நாமும் வாக்கு செலுத்தி விடுகிறோம். அவர்கள் வெற்றி பெற்ற பிறகு ஒருநாள் படமாக ஒரு பொிய கப்பல் போன்று ஒரு வாகனத்தில் ஊர் ஊராக கையைக்காட்டி மக்களுக்கு நன்றி சொல்வதுபோல் படம் காட்டுகிறார்கள் அவ்வளவுதான். தங்கள் வேலை முடிந்தது என்று அவர்கள் வேலையை பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். MLA MP போன்றவா்றிக்கு வருடத்திற்கு அரசாங்கம் எவ்வளவு பணம் ஒதுக்குகிறது என்று மக்களுக்கு தொியுமா? அதை அவர்கள் எப்படி செலவு செய்கிறார்கள் என்று என்றாவது மக்கள் யோசித்து இருக்கிறார்களா? மக்களுக்கு அதைபற்றியெல்லாம் கவலை இல்லை. தேர்தல் அன்று எவ்வளவு ஒவ்ஒரு கட்சி பிரமுகமும் எவ்வளவு பணம் தருவார்கள் என்று மட்டுமே யோசிக்கிறார்கள். தேர்தலில் MLA MP ஆக நிற்பவர்கள் ஒரு வாக்குக்கு 1000 அல்லது 2000 போன்று அந்நேரம் எவ்வாறு மக்கள் எதிர்பார்க்கிறார்கலோ அதை கொடுத்துவிட்டு பதவியை பெற்றுக் கொள்கிறார்கள். இதைப்பார்க்க வியாபரம் போல் தொியவில்லை. மக்களுக்கு உண்மையிலேயே நம் எல்லாம் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்றே தொியவில்லை. உண்மையிலேயே தொியவில்லையா அல்லது யாரும் எப்படி போகட்டும் நமக்கு இன்றைக்கு 1000 அல்லது 2000 வந்துவிட்டதே என்று நினைக்கிறார்களா என்று எனக்கு தொியவில்லை MLA MP க்கு அரசாங்கம் கொடுக்கும் பணம் யாருடைய பணம்? மக்களின் பணம் அதை மக்களே புாிந்துகொண்டதாகத் தொியவில்லை. இது எப்படி இருக்கிறது? ஒரு வியாபாரம் போல் தொிகிறது. ஒரு வியாபாாி 10 லட்சத்தையோ 15 லட்சத்தையோ முதலிட்டு தொழில் தொடங்கிவிட்டு ஒரு ஜந்தாண்டுகளில் எப்படியும் 10 கோடியோ 15 கோடியோ சம்பாதித்துவிடுவார். அது தொழில் தர்மம். ஆனால் இதையே MLA MP க்கள் செய்தால் அது மக்களுக்கு செய்யும் துரோகம். மக்களே ஒரு வேண்டுகோள். நான் மறுபடியும் சொல்கிறேன் நீங்கள் யாருக்கு வேண்டுமாளாலும் வாக்களியுங்கள் அது முக்கியமல்ல. அவர்கள் உங்களுக்காக சட்டசபை, நாடாளுமன்றம் உங்கள் தொகுதிக்காக வாதாடுகிறார்களா? என்று பாருங்கள். அரசாங்கங்கள் உங்கள் தொகுதிக்கு எவ்வளவு பணம் ஒதுக்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பாருங்கள். அந்த பணத்தை இவர்கள் மக்களுக்காக சாியாக செலவிடுகிறார்களா என்றும் பாருங்கள். தகவல் உாிமம் சட்டம் இருக்கிறது. கவலைப்படாதீர்கள். அப்படி சாியாக செய்யும் MLA MP க்கள் தான் நமக்கு வேண்டும். அவர் எதிர்கட்சியாக இருந்தாலும் நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. MLA MP என்பவர்கள் மக்களைப்பற்றி கவலைப்படுபவராக இருக்க வேண்டும். அதேபோல் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள். நான் இளிவு உங்களைப்பற்றி எழுதிவிட்டேன் என் மீது வருத்தப்படாதீர்கள். தாராளமாக பதவிக்கு வாருங்கள் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்யுங்கள். நான் முடிந்தவரை என்றுதான் கூறினேன். மக்களுக்கு சேவை செய்யும் போது ஜாதி மதம் ஏழை பணக்காரர் என்று பிாித்துபார்த்து எதையும் செய்யாதீர்கள் இதை உங்களுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். அடுத்த கட்டுரையில் மறுபடியும் சந்திக்கிறேன். இந்தியா வாழ்க. தமிழ்நாடு வாழ்க

Advertisement

shadow

Leave a Reply