shadow

செய்தித்தாளில் ஒரு கட்டுரைப் படித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம். மருந்துக்கே நோய் வந்தால்….. என்ற கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது. உலக நாடுகளில் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட Anal gin, cisapride, properidho, Nitrofurozone , Phenol phthalecin உள்ளிட்ட பல மருந்துகள் நம் நாட்டில் தங்குதடையின்றி சந்தையில் விற்கப்படுகிறது என்று அந்த கட்டுரையாளர் கவலையுடன் தொிவிக்கிறார். இது மன அழுத்தம், நாடித்துடிப்பை சீர்குழைத்தல், கல்லீரலை பாதித்தல் போன்ற நோய்களை உண்டாக்குகிறது என்று தொிவிக்கிறார். மேலும் மருந்துக்கடைகளில் காலாவதியான மருந்துகளை ஓரு கும்பல் சேகாித்து சென்று காலாவதி தேதியை மாற்றி புது லேபிள் ஒட்டி மறு சுழற்சி செய்வதாகவும் கூறுகிறார். இதைவிடக் கொடுமை என்னவென்றால் அச்சிடப்பட்டுள்ள Batch எண்ணையே மாற்றி எழுதி விற்பனைக்கு அனுப்புவதாகவும் கூறுகிறார். நாம் என்னதான் செய்வது? மேலும் மருத்துவர்கள் எழுதும் மருந்துகள் அவற்றின் பயன்கள் குறித்து மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும். மருத்துவர் தரும் மருந்துச் சீட்டில் நோயின் தன்மை எழுதப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். மேலும் வெளியுாில் அந்த மருந்து கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள் சேவை மகத்தானது. அர்ப்பணிப்புணர்வும் தொழில் அறமும் சேவை உள்ளமும் கொண்ட ஏராளமான மருத்துவர்கள் மக்களின் மனங்களை ஆள்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் குணமாக்கும் மருத்துவத்தை பணமாக்க மட்டுமே பயன்படுத்துவது பஞ்சமா பாதகத்திலும் கொடிய பாதகம். மருந்து நிறுவனங்களில் நடவடிக்கைகளை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை அரசே நிர்ணயித்தது போல மக்களுக்கும் அதற்குறிய நியமன விலையை அரசே மக்கள் நல சிந்தை கொண்ட நிபுணா் குழுவை நியமித்துத் தீா்மானிக்க வேண்டும். இதுவே மத்திய மாநில அரசுகளுக்கு என் பணிவான வேண்டுகோள்.

மறுபடியும் கட்டுரையாளர் கூறியதை ஞாபகப்படுத்துகிறேன்

”நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம் மருந்துக்கே நோய் வந்தால்…..”

Advertisement

shadow

Leave a Reply