shadow

தொலைக்காட்சிகளில் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப ரூ.60 கோடி செல வாகும் என தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒரு பொதுநல மனு விசாரணைக்கு வந்தபோது, பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்த தகவல்கள் அனைத்தையும் மனுவாகத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையடுத்து இந்த பதிலை அரசு அளித்துள்ளது. “ சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கொண்டு சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்ப கட்ட செலவாக மட்டும் ரூ.60 கோடி செலவாகும்.

இது தவிர நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியை சரியான முறையில் நடத்தவும், அதில் பணி செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஒவ்வொரு மாதமும் ரூ.20.60 லட்சம் செலவாகும். பேரவை கூட்டத்தொடர் ஆண்டுக்கு 50 முதல் 60 நாள்கள் மட்டுமே நடைபெறுகிறது அப்படி இருக்கையில், மனித வளம் வீணடிக் கப்படும்” என்றும் அரசு காரணம் கூறியுள்ளது.அடேங்கப்பா, மனித வளம் வீணாகப் போவதைப்பற்றி அரசுக்கு என்னே கவலை ! மேலும் பேரவை நிகழ்ச்சிகளை சுருக்கி அதன் ஒளி நாடாஅனைத்து தொலைக்காட்சிகளுக்கு அளிக்கப் படுவதாகவும் அரசு கூறியுள்ளது.

இவ்வளவும் செய்யும் அரசு நேரடி ஒளிபரப்பையும் செய்தால் என்ன என்பது தான் கேள்வி. வெறும் செலவு மட்டும் தான் அதில் பிரச்சனையா? என்றால் இல்லை. தமிழகத்தை சுற்றியுள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இவற்றையெல்லாம் கேள்வி கேட்டால் “ சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்புவது பேரவைத்தலைவரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது” என்று மாநில அரசு பந்தை அவர் பக்கம் உருட்டி விடுகிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி யடைந்துள்ள நிலையில் வெளிப்படைத்தன்மை பற்றி அதிகமாக பேசப்படுகிறது. எனவே பேரவையில் மக்கள் பிரதி நிதிகள் எப்படி பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள்.

அவர்களின் கேள்விகளுக்கு அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ளவும் நேரடிஒளிபரப்பு பயன்படும் அல்லவா?பேரவை நிகழ்ச்சிகள் ஆண்டுக்கு 60 நாட்கள் மட்டுமே நடக்கிறது. எனவே மற்ற நாட்களில் வீணாக சம்பளம் அளிக்கவேண்டுமா என்றும் அரசுகேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு மக்களவை, மாநிலங்களவை தொலைக்காட்சிகளே நல்ல உதாரணம். நாடாளுமன்றம் நடைபெறாத நாட்களில் அந்த தொலைக்காட்சிகளில் நாடாளுமன்றஉறுப்பினர்களின் பேட்டிகள், நாடாளுமன்ற வரலாறு, முந்தைய அவைத் தலைவர்களின் பேட்டிகள், முக்கியமான விவாதங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் சட்டப்பேரவை குறித்த செய்திகளின் சுருக்கத்தை தற்போதுதொலைக்காட்சிகளிலும் செய்தித் தாள்களிலும்தான் மக்கள் பார்க்கமுடிகிறது.மேலும் அந்தந்த செய்தி நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப செய்திகள் சொல்லப்படுகின்றன. எனவே சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பினால் முழு நிகழ்ச்சிகளையும் மக்கள் அறிந்து கொள்ளவும் முடியும்.எனவே அரசு கூறுவதைப்போல் நேரடி ஒளிபரப்புக்கு வீண் செலவு என்பதெல்லாம் ஒரு காரணமே அல்ல. அரசியல் ரீதியாக வேறு விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம்தான் காரணம்.

- நன்றி

theekathirlogo

Advertisement

shadow

Leave a Reply