shadow

மது விலக்கினை அமுல்படுத்த வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்தான். ஆனால் மதுவினை முற்றிலுமாக ஒழித்தால் அதன் பின் விளைவுகளை 2016 பதிவி ஏற்கவிருக்கும் அரசாங்கம் சந்திக்க நேரிடும். இந்த மதுவினால் ஒரு வருடத்திற்கு சராசரியாக 22000 கோடி அரசுக்கு கிடைக்கிறது. நான் இப்படி சொன்னவுடன் என்னை குடிகாரன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் இதுவரை மது அறுந்தவுமில்லை இனியும் அதை தொடப்போவதும் இல்லை.

மது விலக்கை முழுமையாக அமுல்படுத்தும்போது ஏழைகளுக்கு, முதியோர்க்கு, விதவைகளுக்கு வழங்கப்படும் உதவிதொகையில் நிச்சயம் பொருளாதார தேக்கம் ஏற்படும் என்பது என் கருத்து. தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவிலக்கு என்ற ஆயுதத்தை கையில் எடுப்பதை பார்க்கும்போது, இது ஒரு அரசியல் நாடகமாகத்தான் தோன்றுகிறது. முதலில் 1971ல் கலைஞர் அவர்கள் நிதி நெருக்கடியின் காரணமாக மது விலக்கு சட்டத்தை தளர்தினார். ஆனால் 1974ல் அவரே மதுவிலக்கை கொண்டுவந்தார். அதன் பின் ஆட்சிக்கு வந்த புரட்சி தலைவர் அவர்கள் 1981ல் மது விலக்கு சட்டத்தை நீக்கினார். ஏன் என்று ஆராய்ந்தபோது அந்த மது விலக்கு அமுல்படுத்தி இருக்கும் நேரத்தில் அதாவது 1974-1981 வரை கள்ளசாராயத்தை மக்கள் அருந்தி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். இதனை கருதியே எம்.ஜி.ஆர் அவர்கள் மது விலக்கு சட்டத்தை நீக்கினார்.நம்முடைய மக்கள் மிகவும் நல்லவர்கள் ஏன் என்றால் இங்கு மது விலக்கு இருந்தால், அடுத்த மாநிலத்திற்கு சென்றாவது மதுவை வாங்கி வந்து அறுந்திவிடுவார்கள், அவர்கள் அவ்வளவு நல்லவர்கள்.

பட்டுக்கோட்டையார் பாடியதுபோல “திட்டம் போட்டு திருடுர கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது… திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

என்ன! ஒன்று செய்யலாம் அவ்வளவு மதுக் கடைகளையும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரைதான் திறக்க வேண்டும் என்றும், வாரம் ஒரு நாள், திங்கள் கிழமை விடுமுறை விடலாம். என் அறிவுக்குப் பட்டதை சொல்லிவிட்டேன். இதில் எதும் பிழை இருக்குமானால் பொறுத்து கொள்ளுங்கள்.!!

Advertisement

shadow

Leave a Reply