shadow

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க பட்ஜெட்-ல் வழிவகை இல்லை. புதிய வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் பொதுமக்கள் எதிர்பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்-ல் இல்லை. மேலும் எந்த தொலைநோக்கு திட்டங்களும் இந்த பட்ஜெட்-ல் காணப்படவில்லை.

அதிக திறன் கொண்ட மின்கடவு பாதை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளத்தால் அடிக்கடி நிகழும் மின்தடைக்கு தீர்வு ஏற்படும் நம்பிக்கை இருக்கிறது.

வரி செலுத்தாமல் பொருட்களை விற்கும் ஆன்லைன் வர்த்தகம் குறித்த பிரட்சணைகளுக்கு தீர்வு இன்றி பட்ஜெட் என்பது சம்பிரதாயமாகவே உள்ளது. வாட் வரி விதித்து இருப்பது கவலைக்குறியது.

கல்விக்கு 50 சதவீதம் நீதி ஒதுக்கி இருப்பது வரவேற்கதக்கது.

ஆனால் என் பார்வையில் மக்களுக்கு இது ஏமாற்றம் தரும் பட்ஜெட்டே. அரசு பணி, ஆசிரியர் வேலை வாய்ப்பு தொடர்பாக ஏதும் அறிவிக்கபட்டதாக என் கண்ணில் படவில்லை. பட்ஜெட்-ல் பள்ளி கல்வித் துறையில் வளர்ச்சி திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள் அமைத்தல், மாணவர்களுக்கு மின்னனு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட புதிய அம்சங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குறியது. மேலும் துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் இவர்களிடமிருந்து எந்தக் கருத்தையும் கேட்காமல் இயற்றிய பட்ஜெட்.

மொத்தத்தில் ஏமாற்றம்.! ஏமாற்றம்..!! ஏமாற்றம்…!!!

நன்றி வணக்கம்…!

MANDRASELVAN RAGUPATHI
Founder / Senior Editor
Mobile/WhatsApp:+919750054908

Advertisement

shadow

Leave a Reply