shadow

டெட் (TN TET) தேர்வு எழுதியவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் முன் வைக்கும் சில கேள்விகள்.

TET தேர்வு என்பது வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை? SLET, NET, PGTRB, TNPSC, BANK, RAILWAY போன்ற தேர்வு முறைகளிலும் மற்றும் நாட்டில் மிக உயர்ந்ததாக கருதப்படும் IAS, IPS தேர்விற்கும் சரி படிப்பு மற்றும் வயது சார்ந்த அடிப்படை தகுதிகளை அடுத்து, அந்த துறையில் நடத்தப்படும் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப் படுகிறது. அதாவது மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து ரோஸ்டர் அடிப்படையில் தேர்வு செய்து அதன்பின் எத்தனை காலி பணி இடங்கள் இருக்கிறதோ வழங்குதல் முறை.

டெட் தேர்வில் முரண்பாடு ஏன்? இந்த வெய்ட்டேஜ் யாரைக் கருத்தில் கொண்டு உள்ளே நுழைக்கபட்டது? முதலில் 90 மதிப்பெண்தான் எடுக்க வேண்டும் என்ற முறையை அரசு கொண்டு வந்தது. அதன்பின் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைபடி 82 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நிலை உறுவாகியது.

இந்த நிலையில் தமிழக அரசு வெயிட்டேஜ் என்ற முறையை உள்ளே நுழைத்து குழப்ப ஆரம்பித்துவிட்டது. முதழில் ஒரு வெயிட்டேஜ் என்ற முறையை உள்ளே நுழைத்து அதில் ஒரு குழப்பம். அதன்பின், அது சரி இல்லை என்று சொல்லி அடுத்த வெயிட்டேஜ் முறையை உள்ளே திணித்து 1400 பெருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. அதன் பின் உயர்நீதி மன்றத்தின் பரிந்துரையின் படி 82 மதிப்பெண் செல்லுபடி ஆகாது 90 மதிப்பெண்தான் சரி என்று தீர்ப்பு அளித்தது. அதன்பின் தற்போது வேயிடெஜ் முறையை எடுத்துக் கொள்வதா இல்லை கை விடுவதா என்ற தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் கையில் உள்ளது. இது என்ன சித்து விளையாட்டு?

திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து ஒரு ஆண் ஏன் எனக்கு இன்னும் வரதட்சணை வழங்கவில்லை என்று கேட்டு கொடுமை படுத்துவதுபோல் இருக்கிறது இந்த கதை. பொதுவாக அட்டமைஸ் கல்லூரிகளிலும், டீம்ட் பல்கலைக்கழகங்களிலும் படிப்பவர்களுக்கு அந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எளிமையான தேர்வு தாள்களை எடுத்து நல்ல மதிப்பெண்களையும் அள்ளி போட்டு விடுகின்றன. ஆனால் அரசு பல்கலைகழகங்கள் அவ்வாறு செய்வதில்லை. கேள்வி தாள்களோ மிகவும் கடினம். தேர்ச்சி பெறுபவர்கள் 60% எடுப்பதே பெரிய விஷயம். ஆனால் டீம்ட் பல்கலைகழகங்களில் படிப்பவர்கள் சாதாரணமாக 80% எடுத்து விடுகிறார்கள். இரண்டையும் எப்படி ஒன்றாக கருத்த முடியும்? மேலும், முக்கியமான ஒரு விசயம் மேல்நிலைக் கல்வியில் Vocational Group எடுப்பவர்களுக்கு Practical Mark 400 மதிப்பெண்கள் அந்த பள்ளிகளிலேயே அள்ளி போட்டு விடுகிறார்கள். ஆனால் மற்ற பிரிவு எடுப்பவர்களுக்கு எல்லாமே பொதுத் தேர்வில்தான் எடுத்தாக வேண்டும். எப்படி இந்த கணக்கில் வெயிட்டேஜ் முறையை புகுத்த முடியும்? இந்த குழப்பத்தை கல்வியாளர்கள் எடுத்துரைக்க மறந்துவிட்டார்கள்?

இவ்வாறு எல்லா பிரச்சினையும் உச்ச நீதி மன்திறத்தில் இருக்கிறது. உச்ச நீதிமன்ற அமர்வுதான் தமிழக மாணவர்களை காப்பாற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தைத்தான் கடவுள்போல் நம்பி இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளே தமிழக மக்களை காப்பாற்றுங்கள். கண்ணீரோடு மன்றாடுகின்றோம்.

Advertisement

shadow

Leave a Reply