shadow

ஒரு சொத்தை வாங்கும்போது முதலில் புரோக்கரிடமோ, சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பத்திர எழுத்தரிடமோ செல்லாதீர்கள். ஒரு இடம் வாங்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அந்த VAO மற்றும் தலையாரியைச் சந்தியுங்கள். நீங்கள் பார்த்த இடத்தின் சர்வே எண் என்ன? என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு VAO விடம் அந்த இடத்தின் 10-1 அதாவது பட்டா நகல் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். அதில் உண்மையான உரிமைதாரர் தெரிந்துவிடும். அதன் பிறகு தலையாரியிடம் செல்லுங்கள். இது இப்பொழுது யார் பயன்படுத்துகிறார்கள் என்று விவரியுங்கள். அப்பொழுது பட்டாதாரரும், அதை உபயோகிப்பவரும் ஒன்றுதானா என்று பாருங்கள். ஒரே நபராக இருந்தால் பிரச்சனை ஒன்றுமில்லை. சரி வெவ்வேறு நபராக இருந்தால், அடங்கள் என்று சொல்லக்கூடிய அனுபவ Document – ஐ VAO-விடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அந்த நபர் பட்டாதாரரிடம் இது முறையாக பெற்றதா என்று விசாரியுங்கள். இதையும் தவிர்த்து அந்த இடத்தை உபயோகிபவர்க்கும், பட்டாதாரருக்கும் சம்மந்தமில்லை என தெரிந்தால் அந்த இடத்தை உடனே பத்திர பதிவு செய்துவிடாதீர்கள். அடுத்த கட்டமாக VAO-விடம் சென்று முதல் பட்டாதாரர் யார்யாரிடம் விற்று இருக்கிறார். எத்தனை பகுதிகளாக விற்று இருக்கிறார் என்று A-Register – ஐ பாருங்கள். பலபேர் இதை கவனிக்காமல் புரோக்கர் சொல்வதை கேட்டு இடத்தை வாங்கி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் உடனே பட்டா மாற்றுவதில்லை. இரண்டு அல்லது மூன்று வருடமோ கழித்து பட்டா மாற்ற தாலுகா அலுவலகம் செல்லும் பொழுது அவர்கள் நீங்கள் சரியான நபரிடம் இருந்து இடத்தை வாங்கவில்லை, எனவே பட்டா மாற்ற முடியாது என்று கூறிவிடுவார்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு பத்திரம் எழுதிக் கொடுத்தவரும் இருக்கமாட்டர், புரோக்கரும் காணாமல் போய்விடுவார். நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த நேரத்தில் ஒரு வழக்கறிங்கரை அணுகி பட்டாதாரார் அல்லது உங்களை ஏமாற்றியவர் மீது வழக்கு தொடுப்பீர்கள்.  வழக்கு என்ன ஆகும் குறைந்தது இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும், அதிகபட்சம் கடவுளுக்கே வெளிச்சம். இந்த நிலையில் இந்த இடமே வேண்டாம் என்று நினைக்கத்தோன்றும். எனவே முதலில் முறைபடிச் சென்று யாருடைய இடம்,

வாங்கினால் சட்டப்படி செல்லும் என்று விசாரித்து அதன் பிறகு Sub – Register அலுவலகம் சென்று பத்திர பதிவு செய்து உடனே பட்டாவை உங்கள் பெயரில் மாற்றிவிடுங்கள்.

மக்களே விழித்திடுங்கள்!

Advertisement

shadow

Leave a Reply