shadow

அண்மைக் காலத்தில் உச்சநீதீமன்றம் பகர்ந்துள்ள சில தீர்ப்புகள் வெளிப்படையாகவே பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிராக இருப்பதைப் பார்க்க முடிகின்றது..

முதலில் நீட் பற்றிய தீர்ப்பு.

Merit என்ற பெயரில் இடஒதுக்கீட்டை துவம்சம் செய்து விட்ட தீர்ப்பு..

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றம் இழைத்தவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்பது சட்டம்.ஆனால் தற்போது கைது செய்வதே கூடாது என்றும் முன் ஜாமீன் வழங்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ள தீர்ப்பு தாழ்த்தப்பட்டவர்களை வாழ விடாமல் செய்து விடும் என்பதால் தான் வடஇந்தியா பற்றி எரிகிறது..

வரதட்சணைக் கொடுமை சட்டத்திலும் அதே போல பெண்ணுரிமைக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டு பின்பு அது திருத்தப்பட்டது..

இந்தப் போக்கு நீடித்தால் சமூக நீதீயை உத்திரவாதம் செய்ய வேண்டிய உச்சநீதீமன்றத்தை சமூகநீதீக்கு எதிரான அமைப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தேகிக்க வேண்டிய நிலைமைஏற்பட்டு விடும் அபாயமுள்ளது..

சில சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பது உண்மையானால் அந்த துஷ்பிரயோகத்தை தடுக்க தக்க மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமே தவிர அந்த சட்டத்தையே நீர்த்துப் போக வைப்பது மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் வேலையாகி விடும்..

சமூக அக்கறையும் அளவுகடந்த சிந்தனாசக்தியும் நெஞ்சுரமும் உள்ள நீதீயரசர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சம் மெல்ல மெல்லத் துளிர்க்க இந்தத் தீர்ப்புகள் இடமளிக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.

- நன்றி, தீக்கதிர்………………………………………………………………………….

Advertisement

shadow

Leave a Reply