shadow

இந்தியாவில் எத்தனையோ கலைகள், விளையாட்டுகள், உடற்பயிற்சி முறைகள் செழிப்பாக வளர்ந்துள்ளன. அவற்றில் உடலையும் உள்ளத் தையும் ஒருங்கிணைக்கிற ஒரு பயிற்சிதான் யோகா. இந்த ஆரோக்கியமான பயிற்சிகளை மேலும்மேலும் வளர்க்க வேண்டும், பரவலாக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்துஇருப்பதற்கில்லை. எங்கே சிக்கல் வருகிறதென்றால், இப்படிப்பட்ட உடலியல் சார்ந்த பயிற்சி களை அறிவியல் பூர்வமாக அணுகுவதற்கு பதிலாக, அவற்றிற்கு ஆன்மீக முலாம் பூசப்பட்டுவிடுகிறது.

அதிலும் குறிப்பிட்ட ஒரு மதமும்அதன் சடங்குகளும் சின்னங்களும் சார்ந்த அம் சங்களோடு அடையாளப்படுத்திவிடுகிறார்கள். அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டிய இத்தகைய கலைகள் மதச்சார்புள்ள தாகவும், அறிவியலற்ற நம்பிக்கைகளில் மூழ்கடிப்பதாகவும் மாற்றப்படுகின்றன.யோகா பயிற்சி முகாம்களில் இது குறித்து கேட்கப்பட்டதுண்டு. முகாம்களை நடத்துவோர் மத வேலிகளுக்குள் இருப்பவர்களென்றால் இதையெல்லாம் நியாயப்படுத்துவார்கள். மதச்சார்பின்மையைப் போற்றுவோரென்றால் சடங்குமுறைகள் தேவையில்லையென ஒப்புக்கொள் வார்கள்.

இம்மாதம் 21ல் உலக யோகா தினம் என்று அறிவித்து, தடபுடல் ஏற்பாடுகளில் இறங்கியுள்ள நரேந்திர மோடி அரசின் நோக்கம் யோகாகலையை வளர்ப்பதா அல்லது அதன் பெயரால் தனது மதவாத அரசியலை வளர்ப்பதா என்றுவிவாதிக்கப்படுவது இயல்பானதே. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஓராண் டில், எப்படியெல்லாம் தங்களது மதவெறி நோக்கங்களுக்கேற்ப செயல்பட்டிருக்கிறார்கள் என்ப தோடு இதனை இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.யோகா தின ஏற்பாடுகளுக்காக நாடே முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகள் முதல் பல்வேறு தரப்பினரும் ஒத்திகைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்துத்துவா இயக்கங்களோடு தொடர்புள்ள பிரமுகர்கள் பயிற்சிகளை நடத்து கிறார்கள். விமர்சனங்களிலிருந்து திசை திருப்பு வதற்காக ஊடகங்களின் ஒத்துழைப்பைப் பெறும்நோக்கத்துடன் ரூ.80 கோடி அளவிற்கு விளம்பரங்களுக்காகச் செலவிடுவது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ‘ஓம்’ என்பது போன்ற, மதவழிபாடு சார்ந்த சொற்களை உச்சரிப்பது உள் ளிட்ட பயிற்சி முறைகள் குறித்தும் இதனால் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த குழந்தைகள் மீதும்இது திணிக்கப்படுவது குறித்தும் கடுமை யான விமர்சனங்களும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

அதன் பிறகு ஓம் என்பதற்கு பதிலாக ‘அல்லா’ என்றும் உச்சரிக்கலாம் என்பதாக மத்திய அமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். இது ஒரு தற்காலிகமான சமாளிப்பே என்பதை மறைப்பதற்கில்லை.ஒரு ஆரோக்கியமான உடற்பயிற்சியை பரப்பு வதுதான் நோக்கம் என்றால் இப்படிப்பட்ட மதஅடையாளங்கள் எதுவும் இல்லாமலே அதைச்செய்ய முடியும். பகுத்தறிவாளர்களின் துணைகொண்டு செய்ய முடியும். மேலும் வறுமை, கல்வியின்மை, சாதிப்பாகுபாடுகள் போன்ற எண்ணற்றபிரச் சனைகள் இருக்கிற போது இதற்கென்னஅவசர முக்கியத்துவம் வந்துவிட்டது?

அத்துடன் எல்லா மாநிலங்களிலும் உடற்பயிற்சி, தற்காப்பு அடிப் படையிலான பாரம்பரியமான கலைகள் பல நலிந்த நிலையில் இருக்கின்றன. அவற்றின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்க்க, அவற்றை வளர்த்தெடுக்க என்ன செய்தார்கள்? பிரச்சார உத்திகளையெல்லாம் தாண்டி இந்திய மக்கள் இதை விசாரணைக்கு உட்படுத்துவார்கள்.

- நன்றி: தீக்கதிர்

Advertisement

shadow

Leave a Reply