shadow

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மட்டும் டீசல் விலை குறைவதாக செய்தித்தாளில் எல்லோரும் படித்திருப்போம். நேற்று காலை பெட்ரோல் விலை குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கையில் பார்த்தேன்!.

முதலில் பெட்ரோல் டீசல் விலையை காரணம் காட்டி எவ்வளவு பொருள்களின் விலையை உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தினார்கள். அதை காரணம் காட்டி தமிழகத்திலும் பஸ் கட்டணம் கூட உயர்த்தப்பட்டது. பெட்ரோல் டீசல் விலையை கூட்டும்போது பஸ் கட்டணம் கூட்டப்பட்டது, மற்ற விலைகளும் கூடியது. அதுவும் பஸ் கட்டணம் ரூபாய் கணக்கில் கூட்டுகிறார்கள். பெட்ரோல் டீசல் விலை குறையும் போது பைசா கணக்கில் குறைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொரு விதமான விலை நிலவி வருகிறது. ஏன் இந்த வித்தியாசம் என தெரியவில்லை. மொத்த விலை குறியீட்டென் எப்போதும் இல்லாத அளவிற்கு 7.7% ஆக விலை குறைக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் விலைவாசி குறைந்ததாக யாரும் இதுவரை கூறியதாகக் தெரியவில்லை. இது என்ன பொருளாதாரம் என்று விளங்கவில்லை. ஆயிரம்தான் பொருளாதாரத்தைப் பற்றி கூறினாலும் அன்றாட தேவையான அத்தியாவசிய பொருள்களின் விலை குறையவில்லை என்றால் மக்கள் அரசாங்கத்தையும் அரசியல்வாதிகளையும் நம்ப மாட்டார்கள். மக்களுக்கு பொருளாதாரக் கொள்கைகளெல்லாம் தெரியாது. ஒவ்வொருவரும் பொருளாதாரத்தில் MPhil., Phd., பட்டமா பெற்றிருக்கிறார்கள்? 100க்கு 75 சதவீதம் சாதாரணமான அடித்தட்டு வேலை செய்பவர்கள், மற்றும் விவசாயிகள். இவர்களிடம் போய் பொருளாதார விதிகளைப்பற்றி பேசினால் அவர்களுக்கு என்ன தெரியும். மக்கள் என்ன நினைப்பார்கள் ஆட்சிக்கு வரும் முன்னர் அதை சரி செய்வேன் இதை சரி செய்வேன் என்று கூறினார்களே, இவ்வளவு நாட்களாகியும் ஒன்றும் சரி செய்யவில்லையே என்றுதான் நினைப்பார்கள். இதை போய் ஆளும் கட்சிக்காரர்களிடம் கேட்டால் இப்போதுதானே ஆட்சிக்கு வந்திருக்கிறோம் உடனே சரிசெய்து விட முடியுமா? என்று கேட்கிறார்கள். சரி இவர்களும் இப்படி பேசிக்கொண்டு இவர்களின் 5 ஆண்டுகாலத்தை ஓட்டிவிடுகிறார்கள். அடுத்த முறை வேறு ஒருவர் வருகிறார். உடனே முந்தய ஆளும்கட்சி என்ன சொல்கிறது விலையை ஏன் குறைக்கவில்லை என்று கூச்சல் போட்டுக் கத்துகிறது. இதைத்தானையா மக்கள் எல்லோரும் முன்பும் கேட்டார்கள். அப்போது உங்களுக்கு பொருளாதார விதிகள் தெரிந்தது, இப்போது தெரியவில்லை. அதேப்போல் முதலில் எதிர் கட்சியாக இருந்தபோது கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவது, இதெல்லாம் சகஜமப்பா! என்று தோரணையுடன் கூறுவது.  ஆக மொத்தம் ஏமாறுபவர்கள் மக்களே. ஆங்கில இலக்கியத்தில் சேக்ஸ்பியர் நாடகத்தில் ஒரு வசனம் உண்டு. “ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்துகொண்டுதான் இருப்பான்”. அதுபோல் தான் நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் நமது பிரதமர் மோடி அவர்களுக்கு அதிஷ்டம் இருக்கிறது என்று நினைக்கிறேன் சந்தையில் கட்சா என்னை பேரலுக்கு $66 ஆக குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அந்த விகிதத்தில் குறைந்ததாக தெரியவில்லை. BJP ஒரு மெஜாரட்டி அரசு. இதை வைத்துக் கொண்டு மக்களுக்கு சிறப்பாகச் செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் தனியாருக்கு தாரைவார்ப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. என் அறிவுக்கு எட்டியவரை இந்திய பொருளாதார நிலை நன்றாகவே இருக்கிறது. இந்த நிலையில் மத்திய அரசு விலை வாசியை குறைத்து மக்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

Advertisement

shadow

Leave a Reply