shadow

காமராஜ் பல்கலை கழகம் ஆய்வு: உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முதளாளித்துவ முறையின் தோல்வியே காரணம் என்று பல்கலை கருத்தரங்கில் பேராசிரியர் ஆத்திரேயா கூறினார்.இந்த நெருக்கடி சில நாட்களில் ஏற்பட்டதல்ல. 2002 முதல்2006 ஆண்டு வரை அமரிக்காவில் முதலீட்டு வங்கிகள் பெருமளவில் வீட்டுக் கடன்களை வழங்கியதால் வீடுகளின மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. இதை அடுத்து கூடுதல் கடன்களை வங்கிகள் வழங்கின. கூடுதலாக கடன் பெற்றவர்கள் இந்த பணத்தை ஷேர் மார்க்கட்களில் முதலீடு செய்தனர். இதன் விளைவாக ஷேர் மார்கெட்டின் புள்ளிகள் உயர்ந்தன, இதை வைத்து தங்களது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக எண்ணிய அவர்கள் கார், சொகுசு வாழ்க்கைக்கு மாறினர். சொத்தின் உண்மை மதிப்பு உயர்ந்தது. இந்நிலையில் வங்கிகள் வீட்டுக்கடன்களை ஒட்டு மொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்தன. அவர்கள் மேலும் கூடுதல் தொகைக்கு கடன்களை வேறு நபர்களுக்கு விற்றனர். இந்த வர்த்தகம் ஆரம்பத்தில் நம்பிக்கை அடிப்படையில் நன்றாக நடந்தது. கடன் பெற்றவர்கள் கடனை திரும்ப செலுத்த தவறிய போது நெருக்கடி ஏற்பட்டது. இறுதியாக சொத்து மதிப்பை விட கடன் தொகை அதகரித்து திரும்ப வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டதே அமெரிக்க வங்கிகள் திவாலானததற்கு காரணம். இந்த நெருக்கடி சிறு சிறு தவறுகளால் ஏற்படவில்லை. முதலாளித்துவத்தின் ஆன் லைன் யூக வாணிபமே இந்நெருக்கடிக்கு காரணம். இது இந்திய பொருளாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினர்.

Advertisement

shadow

Leave a Reply