shadow

“தாய்ச்சி” ஒரு ஆற்றல் வாய்ந்த கலை, இது சீனாவின் மார்சியல் கலைகளில் ஒன்று. “தாய்” என்றால் ப்ரபஞ்சம். “ச்சீ” என்றால் (உயிர்)சக்தி, பிரபஞ்ச சக்தியை “தாய்ச்சி” என்கிறோம். பிரபஞ்ச சக்தியை நம் உடல்சக்தியில் இணைப்பது என்று பொருள்.

மருத்துவம், தியானம், தற்காப்பு இம்மூன்றும் இக்கலையை கற்றுக் கொள்வதால் கிடைக்கிறது. பார்ப்பதற்கு நடனம் போல் தோன்றும் இது கற்றுக் கொள்ள எளிதானது. குங்பூ-வை மெதுவான உடல் அசைவுகளாக செய்யப்படுகிறது. எல்லா வயதினரும் கற்றுக் கொள்ள முடியும்.

இதை கற்றுக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எலும்புகள் பலம் பெறுகின்றன. உடல், உயிர், மனம் என்று ஒரே நேரத்தில் மூன்றையும் சீர்படுத்துகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை முறையாகவும் உள்ளது.

சீன மருத்துவத்தில் ஜீரண மண்டலம் தான் ஆரோக்கியத்தின் நுழைவாயில். இதுதான் மற்ற உறுப்புகளையும் சரியாக இயங்க வைக்கிறது. தாய்ச்சி சீரான, மெதுவான உடல் அசைவுகள் மூலம் மூச்சை சீராக்குகிறது. இதனால் உள் உறுப்புகளுக்கு சக்தியானது எளிதாக கிடைக்கிறது. தசைகளும், வயிற்றுப் பகுதியும் சக்தி பெற்று உணவு ஜீரணத்தை எளிதாக்குகிறது.

IMG-20150221-WA0002

Click to Enlarge

அதிகாலை எழுந்து இப்பயிற்சியை மேற்கொள்ளும் போது உடல் மிகவும் சுறுசுறுப்படைகிறது. மனம் அமைதியடைகிறது. நாள் முழுதும் உற்சாகம் கிடைக்கிறது. நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது.

இவ்வளவு நன்மையுள்ள இவ்வுன்னத கலையை ” கராத்தே கண்ணன்” அவர்கள் இராமநாதபுரத்தில் ஒரு வருடமாக பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார்.

“கண்ணராம் தாய்ச்சி அகாடமி” என்ற பெயரில் இயங்கும் இப்பயிற்சி மையம் தனது இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை 18.02.2015 அன்று சிறப்பாக கொண்டாடியது.

DSC_5211

Click to Enlarge

அதிகாலை  5 மணிக்கு தாய்ச்சி பயிற்சி நடைபெற்றது. மகப்பேறு மருத்துவர் திருமதி. மதுரம் அரவிந்தராஜ், “ராஜன் கிளினிக்” நிர்வாக இயக்குனர் திருமதி. வாணி ஜோசப் ராஜன், “ரமேஷ் தியேட்டர்” உரிமையாளர் Er.கீதா ரமேஷ், மகப்பேறு மருத்துவர் திருமதி.கனகப்ரியா மற்றும் “கிருஷ்ணா சால்ட்” உரிமையாளர் திருமதி இலட்சுமி வெங்கட கிருஷ்ணன் அவர்களின் இறைவணக்கதுடன் நிகழ்ச்சி துவங்கியது.

Click to Enlarge

Click to Enlarge

குழந்தை நல மருத்துவர் Dr.விஸ்வநாதன் தலைமையில் தாய்ச்சிகராத்தே மாஸ்டர் கண்ணன், தன் மாணவி வினஷியாவுடன் சேர்ந்து கேக் வெட்டினார்.

பின்னர் மாஸ்டர் கண்ணன் சிறப்புரையாற்றினார். மகப்பேறு மருத்துவர் Dr.மதுரம் அரவிந்தராஜ், அக்கு ஹீலர் R.B.ரவி, “ரமேஷ் தியேட்டர்” உரிமையாளர் Er.கீதா ரமேஷ், அக்கு ஹீலர் ராதிகா ரவி மற்றும் அக்கு ஹீலர்  கவிதா ஞானமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அக்கு ஹீலர் பிரதா சிவக்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். “ராயல் சுந்தரம் இன்சூரன்ஸ்” திரு.M.பத்ரிநாத் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

IMG-20150221-WA0022

Click to Enlarge

நிறைவாக குருவணக்கம் செலுத்தப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

Advertisement

shadow

Leave a Reply