shadow

இன்று ஒரு இனிப்பான செய்தி கண்டேன் என் கனவு நனவாகிவிட்டது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். பஞ்சாபி மொழியில் மருத்துவப் படிப்பை பயில அந்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இது செய்தி. இதைப்போல நம் தமிழக அரசும் தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் மருத்தவம் படிக்கும் மாணவர்கள் தங்கள் மருத்துவ நூல்களை இனிமேல் ஆங்கிலத்தில் படிக்கத் தேவையில்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாபி மொழியிலேயே மருத்துவ நூல்களை மொழி மாற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. தாய் மொழியில் படித்தால் தான் மாணவர்களுக்கு புாிந்து கொள்ளும் திறன் அதிகமாகி அவர்களின் அறிவு தொடர்ந்து கூா்மை ஆகும் என்பதை பஞ்சாப் அரசு பிறப்பித்த உத்தரவின் போில் பாபா பரீத் பல்கலைக் கழகத்தின் சுகாதார அறிவியல் துறை மருத்துவ நூல்களை தங்களது சொந்த மொழியில் மொழி பெயர்க்கும் பணியில் இறங்கி உள்ளது. 60 மருத்துவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது போல் 2010-ல்

அப்பொழுது உள்ள தமிழக அரசும் (தி.மு.க அரசு) அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் இந்தியாவிலேயே முதல் முறையாக மாணவர்கள் தாய் மொழியில் பொறியியல் கற்க வசதி செய்து கொடுத்தது. அதற்கு அந்த அரசுக்கு (தி.மு.க) நன்றி சொல்ல வேண்டும். நமக்கு இந்த அரசு வேண்டும் அல்லது அந்த அரசு வேண்டும் என்பது முக்கியமல்ல. எந்த அரசாக இருந்தாலும் அது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். மக்களுக்கு நன்மை செய்யும் அரசே நம் அரசு. அண்ணா சொன்னது போல் யார் எதைச் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தான் முக்கியம். அதுபோல நமக்கு எந்த அரசியல் கட்சி நம்மை ஆள்கிறது என்பது முக்கியமல்ல. அது மக்களுக்கு நன்மை செய்யும் ஆட்சியாக இருக்க வேண்டும். தமிழையும், தமிழ் நாட்டையும் காக்கும் அரசாக இருக்க வேண்டும் நமது தமிழக அரசும் விரைவில் மருத்துவத்தை தமிழில் கொண்டுவரும் என நம்புவோமாக

நன்றி வணக்கம்

Advertisement

shadow

Leave a Reply