shadow

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் இந்திய மக்களின் சேமிப்பு சூறையாடப்படும் என எல்ஐசி ஊழியர்கள் பிரசாரம் செய்தனர்.
நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளது. இந்த சட்டத்திருத்தம் மூலம் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு அளவை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்ஐசி ஊழியர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதன்படி ராமநாதபுரத்தில் பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.
பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், `அமெரிக்காவிலும், மேலை நாடுகளிலும் திவாலான தனி யார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இந்த சட்ட திருத் தம் மூலம் இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் நுழைந்துவிடும். இந்திய மக்களின் சேமிப்பையும் சூறையாட முயலும். இந்திய மக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் வளர்ச்சி பாதிக்கும் என்றனர். இதனை வலியுறுத்தி எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் நேற்று ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மகாகவி பாரதியார் பிறந்த நாளில் நோட்டீஸ் விநியோகித்து பிரசாரம் மேற்கொண்டனர்.
பிரசார இயக்க தொடக்க நிகழ்ச்சி ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந் தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ராமநாதபுரம் கிளை தலைவர் மனோகரன் தலைமை வகித் தார். பிரசாரத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வான் தமிழ் தொ டங்கி வைத்தார். கிளைச் செயலாளர் முத்துப்பாண்டி கோரிக்கைகளை விளக்கி பேசினர். – நன்றி: தினகரன்

Advertisement

shadow

Leave a Reply