shadow
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வெளியிடும் செய்தி.
இந்திய திருநாட்டின் 66 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது.20150126_080249
நமது நாட்டின் தேசிய கொடியை மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் ஏற்றினார்கள் .
இந்திய விடுதலைப் போராட்டங்களில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த எண்ணிடலங்கா தியாகிகளின் வரலாறுகளை எண்ணி , அதை 20150126_080127உணர்ந்து செயல்படும் வகையில் நமது  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இந்த குடியரசுதின நாளில் நாம் அனைவரும் உறுதி எடுப்போம்.
இந்த நல்ல தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த 66 வது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள்கட்சியின் மாவட்ட , ஒன்றிய, பேரூர், நகர், மற்றும் கிளைகளை சேர்ந்த தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
- PRO, MLA Office.

Advertisement

shadow

Leave a Reply