shadow

திருப்பதியில் இன்று (10.12.2014) தமிழக பத்திரிக்கையாளர்களை, செய்தி சேகரிக்க அனுமதிக்க விடாமல் விரட்டியடிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் (டி.யூ.ஜே) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.journalist

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை ஒட்டி தமிழ் மக்களின் எதிர்ப்புகளையும், தமிழக தலைவர்களின் நிலைகளையும் செய்தியாக்கச் சென்ற தமிழக பத்திரிக்கையாளர்களை, காவல் துறை இன்ஸ்பெக்டர் சத்ருகன் சின்ஹா மற்றும் அவருடைய படையினர் விரட்டி அடித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதில், திருத்தணி மாலை முரசு செய்தியாளர் வினோத் குமார், தாக்கப்பட்டு அவருடைய கேமராவும் உடைக்கப்பட்டுள்ளது. திருத்தணி தினமதி நிருபர் சுதாகர் காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். அவர்களுடைய வாகனங்களும் மடக்கி வைத்துள்ளனர். அது மட்டுமின்றி, படம் பிடிக்க முயலும் தமிழக செய்தியாளர்களை துப்பாக்கி காட்டி மிராட்டியுள்ளார் இன்ஸ்பெக்டர் சத்ருகன் சின்ஹா.

பத்திரிக்கையாளர் பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துவதோடு மட்டுமில்லாமல், அவமானப்படுத்துவது பெரும் கண்டனத்திற்குறியதாகும். தமிழக பத்திரிக்கையாளர்களை பாதுகாப்புடன் திருப்பி அனுப்ப, அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் துணையுடனும், ஆந்திர மாநில பத்திரிக்கையாளர் சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேசி வருவதாகவும், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட் மாநிலத் தலைவர் தி.எஸ்.ஆர்.சுபாஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

shadow

Leave a Reply