shadow

அரசியல், அரசு நிர்வாககத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும். ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றிடும் போதும் அதன் செயல்பாடுகளை கணினிமயமாக்கி வெளிப்படையாக தெரிவிப்பதான் மூலம் ஊழலை சிறிது சிறிதாக ஒழிக்க முடியும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சந்ததியினருக்கு அரசாங்கத்தின் எந்த விதமான சலுகைகளையும் கிடைக்காதவண்ணம், குறிப்பாக வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றை கிடைக்கவிடாத வண்ணம் செய்தால்தான் லஞ்சத்தை ஒழிக்க வாய்ப்புள்ளது. ஊழல் என்பது இன்று, நேற்று ஆரம்பமானதல்ல பல காலமாக வளர்ந்து ஆலமரம் போல் வளர்ந்துள்ளது.

நேர்மை, திறமை இவை இரண்டும் ஒருங்கே அமைந்த நீதிபதிகளின் முன் அனுபவத்தையும், பணி திறமையயும் கவனத்தில் கொண்டு, அவர்கள் ஓய்வு பெற்றபின் அவர்களை விசாரணை அதிகாரிகளாக பயன்படுத்தலாம். ஆனால் பொதுவாக ஒரு கருத்து உண்டு, ஊழலும், லஞ்சமும் சர்க்கரை வியாதி போன்றது. இதனை உடனே ஒழித்துவிட முடியுமா?  ஏனென்றால் இது காலம் காலமாக நம் நாட்டில் புரையோடி வாழ்ந்துகொண்டு இருக்கிறது. முதலில் இதை கட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டும். இதற்கு கடுமையான சட்டங்கள் தேவை. அதை மாநில அரசோ, மத்திய அரசோ சட்டமன்ற, பாராளுமன்றங்களில் கொண்டுவந்து நிலை நிறுத்துமா? அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூச்சமே இல்லாமல் ஊழலோடு சுகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

இது எப்படி நேருகிறது என்றால் ஒவ்வொருவரிடமும் தனிமனித ஒழுக்கமின்மை காரணமாகத்தான். ஊழலையும், லஞ்சத்தையும் ஊக்குவிப்பவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்து வங்கி கணக்குகள், கடவு சீட்டுகள், அவனங்களை முடக்குதல், சொத்துகள் அரசுடமை ஆக்குதல் போன்றவற்றை நடைமுறை படுத்த வேண்டும். இதற்கு என்ன வேண்டும்? தலைமை சரியாக அமைந்தால் ஓரளவுக்கு சரியாகிவிடும். பொதுவாக பிறர் தவறு செய்யும்போது கொதிக்கின்ற நாம், நமது வகையறா என்றால் அடக்கி வாசிக்கப் பார்க்கிறோம். இதுவே சமுதாயத்தில் ஒரு பெரிய ஓட்டை ஆகிவிடுகிறது.

ஊழலும், லஞ்சமும் ஒரு நாட்டை அரிக்கும் கரையான்காள் என்பதை இளம் வயதிலேயே பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இன்று எந்த ஒரு உயர் பதவியும் அரசியல் சிபாரிசு இல்லாமல் பெற முடியவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பெருமளவு நிலை கொண்டுவிட்டது. இப்படி இருந்தால் ஊழலும், லஞ்சமும் எப்படி ஒழியும்? இதை ஒழிக்க ஒரே வழிதான் உள்ளது. நாம் ஒட்டு அளித்து நம்மை ஆழுவதற்கு அனுப்புகின்ற அரசியல்வாதிகள் மனம் மாறினால் இது நிச்சயம் சாத்தியமே! இது நடக்குமா?

Advertisement

shadow

Leave a Reply